• Janarthanan Soundararajan

A First Git Commit - Learn Git in Tamil ( Git-ல் முதல் கமிட் )

Updated: Sep 10, 2019

இந்த வலைதள பதிவில் நாம் எவ்வாறு ஒரு Git project உருவாக்குவது மற்றும் நமது முதல் கமிட் எவ்வாறு செய்யலாம் என்றும் அதற்கு தொடர்புடைய command-கள் பற்றியும் பார்ப்போம். எடுத்துக்காட்டாக Python நிரலாக்க மொழியின் கோப்புகளை எவ்வாறு Git கொண்டு கையாளலாம் என்று பார்ப்போம்.

'git init' கமான்ட்

ஒரு Git project உருவாக்குவதற்கு நமக்கு அடைவு(folder) ஒன்று அவசியம். எனவே அடைவு ஒன்றை உருவாக்க பின்வரும் எடுத்துக்காட்டில் குறிப்பிட்டுள்ள command-களை command prompt அல்லது டெர்மினல் பயன்படுத்துங்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள command-களை பற்றி முதலில் பார்ப்போம். 'mkdir' ஒரு அடைவை உருவாக்க பயன்படுகிறது 'cd' என்ற command ஒரு அடைவிற்குள் செல்வதற்கு பயன்படுகிறது. சரி இப்போது நமக்கு தேவையான அடைவு கிடைத்துவிட்டது எனவே ஒரு Git repository உருவாக்கலாம், அதற்கு நாம் 'git init' command பயன்படுத்த வேண்டும்.

மேலே குறிப்பிட்ட command-களில் முதல் command-யை கவனியுங்கள், 'git status' command project-ல் என்னென்ன மாறுதல்கள் நடந்துள்ளது என அறிவதற்கு உபயோகப்படுகிறது. முதலில் இயக்கிய 'git status' command ஒரு பிழை செய்தியை (fatal: not a git repository (or any of the parent directories): .git) தெரிவிப்பதை பார்க்கலாம், ஏனெனில் இன்னும் நாம் இந்த அடைவை Git project ஆக initialize செய்யவில்லை என்று அர்த்தம். அடைவை Git project ஆக மாற்ற நாம் 'git init' command பயன்படுத்த வேண்டும். 'git init' ரன் செய்தபிறகு Git project உருவாக்கப்பட்டது என்ற செய்தியை பார்க்கலாம். இப்பொழுது 'git status' ரன் செய்யும் பொழுது பிழை செய்தி வராது அதை நாம் எடுத்துக்காட்டில் தெளிவாக காணலாம், ஆனால் சில தகவல்களை நாம் பார்க்கமுடிகிறது அவை; தற்பொழுது பிரஜக்ட் மாஸ்டர் பிராஞ்சில் உள்ளது எனவும், இதுவரை எந்த கமிட்டும் செய்யவில்லை, கமிட் செய்ய வேண்டும் என்றால் git add மூலம் கண்காணிப்பு(track) நிலைக்கு கோப்புகளை சேர்க்க வேண்டும் எனவும் குறிபிடப்பட்டுள்ளது.

git add கமன்ட்டை தொடர்ந்து கோப்புகளின் பெயர் கொடுத்து ரன் செய்யும் பொழுது கோப்புகளை கண்காணிப்பு நிலைக்கு மாற்ற முடியும். ஆனால் தற்பொழுதுள்ள நிலையில் நமது பிராஜக்டில் எந்த ஒரு கோப்புகளும் இல்லை, எனவே நாம் முதலில் பைல் ஒன்றை உருவாக்க வேண்டும். உங்களுக்கு பிடித்த டெக்ஸ்ட் எடிட்டர் மென்பொருளைக் கொண்டு 'gitintamil.py' என்ற பைல் ஒன்றை உருவாக்குங்கள். பிறகு பின்வரும் Code-டை கோப்பில் சேமிக்கவும்.

git add கமான்ட்

கோப்பினை உருவாக்கியபின் மீண்டும் git status ரன் செய்யும் பொழுது சில தகவல்களை காணலாம் அதில் புதிதாய் உருவாக்கிய பைல் கண்காணிப்பு நிலைக்கு மாற்றபடாமல் இருப்பதை குறிப்பிடுகிறது (Untracked files). எனவே கண்காணிப்பு நிலைக்கு மாற்ற பின்வரும் கமான்டை பயன்படுத்தவும்.

மீண்டும் ஒரு முறை git status ரன் செய்யும் பொழுது கோப்பு ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டதையும் தற்பொழுது கமிட் செய்யக்கூடிய நிலையில் இருப்பதையும் குறிப்பிடுகிறது. கிட் சொல்லியல்படி கண்காணிப்பு நிலையானது ஸ்டேஜிங் ஏரியா (staging area) என்று அழைக்கப்படுகிறது.

தொண்ணூறு சதவித வேலை முடிந்துவிட்டது கமிட் செய்வது மட்டுமே மிச்சமுள்ளது.

git commit கமான்ட்

கிட் கமிட் இதுவரை பிராஜக்டில் செய்த மாறுதல்களை சேமிக்க ( local repository) பயன்படுகிறது.

'-m' கமிட் செய்தி (Message) கொடுப்பதற்காக உபயோகப்படுத்தபடுகிறது.

வாசகர்களுக்கு தற்பொழுது கிட்டில் எவ்வாறு முதல் கமிட் செய்ய வேண்டும் என்று புரிந்திருக்கும் என நம்புகிறேன். வாசிப்பதோடு மட்டும் நில்லாமல் உங்கள் கணினியில் செய்து பார்த்தல் மிகவும் அவசியம். அடுத்த பதிப்பில் git commit மற்றும் git log பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

நன்றி!

#gitintamil #git #learnintamil #gitcommit

©2020 by Techaaroorian.

  • Pinterest
  • Twitter Social Icon
  • Facebook
  • YouTube