• Janarthanan Soundararajan

About Git Stash and Unstage, the Staged Files - Learn Git in Tamil

Updated: Aug 25, 2019

கிட் ஸ்டாஷ் (Git Stash) மற்றும் ஸ்டேஜிங்க் ஏரியாவில் (Staging area) சேர்க்கப்பட்ட கோப்புகளை எவ்வாறு அன்ஸ்டேஜ் (Unstage) செய்வது பற்றி தமிழில் கற்றுக்கொள்ளலாம்.

வாசகர்களுக்கு வணக்கம்! இந்த வலைதள பதிவானது கிட்(Git) பற்றிய தொடரில் ஒன்றாகும். இதற்கு முந்தைய வலைதள பதிவில் கிட் கமிட் அமன்ட் மற்றும் கிட் லாஃக் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது அதனை வாசிக்க வேண்டுமெனில் பின்வரும் லிங்க்கை பயன்படுத்துங்கள் (https://www.techaaroorian.com/post/learn-git-commit-amend-and-git-log-in-depth-in-tamil) . இவ்வலைதள பதிவில் கிட் ஸ்டாஷ் மற்றும் அன்ஸ்டேஜ் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.


கிட் ஸ்டாஷ்

இது கிட்டின் மிக உபயோகமான அம்சமாகும். கோப்புகளின் மாறுதல்களை கமிட் செய்த பிறகு உள்ள நிலை க்ளீன் ஸ்டேட் (clean state) என்று அழைக்கப்படும், இதனை 'git status' மூலம் அறியலாம். இதற்கு அர்த்தம் நாம் நமது மாறுதல்கள் மற்றும் அப்டேட்கள் (Update) அனைத்தையும் சேகரித்துவிட்டோம் என்பதாகும். இப்பொழுது நாம் ஏதேனும் மாறுதல்களை கோப்புகளில் செய்தோமனல் புரஜக்டின் (Git Project) நிலை மாடிபைடு (Modified) நிலைக்கு மாறிவிடும். இப்பொழுது 'git status' கொடுத்தால் நாம் மாறுதல் செய்துள்ள கோப்புகளின் விவரங்களை காணலாம். ஆனால் நாம் செய்த மாறுதல்கள் தேவையில்லை என்று நினைக்கிறோம் மற்றும் சேகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றும் எண்ணுகிறோம், இந்நிலையில்தான் 'git stash' கமான்டின் பயன்பாடு மிக முக்கியமாகும். இப்பொழுது கிட் ஸ்டாஷ் கொடுக்கும்போது நிங்கள் செய்த மாறுதல்களை தற்காலிகமாக சேகரித்துவிட்டு மீண்டும் புரஜக்ட்டின் நிலை கிளின் ஸ்டேட்டிற்க்கு மாறிவிடும்.


பின்வரும் எடுத்துக்காட்டில் 'One.txt' கோப்பு மாடிபை (modify) செய்யப்பட்டுள்ளது, அதனை கிட் ஸ்டாஷ் மூலம் புராஜ்க்டை க்கிளீன் ஸ்டேடிற்க்கு மாற்றபடுவதையும் காணலாம்.



தற்காலிகமாக சேகரிக்கப்பட்டுள்ள ஸ்டாஷ் பட்டியல்.


கோப்புகளை அன்ஸ்டேஜ் செய்வது

அன்ஸ்டேஜ் என்பது ஸ்டேஜிங்க் ஏரியாவில் (Staging area) சேர்க்கப்பட்ட ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட கோப்புகளை நீக்கி பழைய நிலைக்கு கொண்டு வருவதாகும். நாம் கோப்புகளில் செய்த மருதல்ககளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதற்கு 'git restore --staged <file>' கமன்டை பயன்படுத்த வேண்டும். பின்வரும் எடுதுகட்டை காண்க.





நமது அடுத்த வலைதள பதிவில் கிட் பிரஜ்ச் (Git Branch) பற்றி விரிவாக பார்போம்.


நன்றி!


#gitintamil #git #learngit #learnprogramming #programming #learngitintamil #versioncontrol

©2020 by Techaaroorian.

  • Pinterest
  • Twitter Social Icon
  • Facebook
  • YouTube