- Janarthanan Soundararajan
Introduction to Git in Tamil - Git பற்றிய அறிமுகம்.

மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படும் மிகவும் பிரபலமான ஒரு பயன்பாட்டு(utility) மென்பொருள் Git. Git உபயோகிப்பதன் மூலம் நாம் மென்பொருள் உருவாக்குவதை எளிமைபடுத்த இயலும். மேலும் ஒன்றிற்கும் மேற்பட்டோர் தனது பங்களிப்பை அளிப்பதற்கு Git மிகவும் உபயோகமாக உள்ளது.
Git ஆங்கிலத்தில் Distributed Version Control என்று அழைக்கபடுகிறது. நாம் செய்யும் அனைத்து குறியீடுகள் மற்றும் மாறுதல்களை பதிப்புகளாக(version) சேகரித்து வைதுகொள்ளும். எனவே ஏப்பொழுது வேண்டுமானாலும் பழைய பதுப்புகளை எடுக்க இயலும், புதிதாக செய்யும் வேலையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் நன்றாக வேலை செய்யும் பதிப்புகளை கொண்டு சரிசெய்ய இயலும். Distributed என்று குறிப்பிடுவதற்கு காரணம் ஒரு project யில் வேலை பார்ப்பவர்கள் அனைவரின் கணினியிலும் பிராஜக்டின் நகல் இருக்கும், எனவே ஒருவரின் கணினியில் பிரச்சனை உண்டனலும் கவலை இல்லை மற்றொருவர் கணினியில் உள்ள நகலை கொண்டு பணியை தொடர முடியும்.
Git-ன் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் collaboration, ஒன்றிற்கும் மேற்பட்டோர் இனைந்து ஒரு project-யில் பணியாற்றுவதை எளிமை படுத்தியது Git.

முன்பெல்லாம் Centralized Version Control System என்ற முறை பின்பற்றப்பட்டது, அதில் ஒரு சர்வர் மையமாக இருந்து அனைத்து கோப்புகளையும் உள்ளடக்கி இருக்கும். ஒருவர் வேலை செய்யும் பொழுது மற்றொருவர் வேலை செய்ய இயலாது, வேலை செய்யும் நபர் வேலை முடிந்த பின்பு commit செய்த பிறகே மற்றொருவர் தன் வேலையை தொடரமுடியும். ஆனால் Git அவ்வாறு கிடையாது, வேலை செய்பவர்கள் அனைவரும் ஒரே வேளையில் பணியாற்ற முடியும். Git merge என்னும் முறை பயன்படுத்தி நாம் கோப்புகளில் செய்த மாறுதல்களை இனைக்க முடியும்.
நண்பர்களே! இப்போது Git உபயோகிப்பதன் மூலம் நம் வேலைகளை எளிமையாக்க முடியும் என்று அறிந்திருப்பீர்கள். இனி வரும் வலைதள பதிப்புகளில் Git-ன் கமாண்டுகள்(command) மற்றும் அம்சங்கள்(features) பற்றி விரிவாக பார்ப்போம்.
நன்றி!