- Janarthanan Soundararajan
Learn git commit --amend and git log in depth in Tamil
கிட் கமிட் அமன்ட் பற்றியும் மற்றும் கிட் லாஃக் பற்றி விரிவாகவும் பார்க்கலாம்

நண்பர்களே! நமது முந்தைய வலைதள பதிவில் கிட் கமிட் மற்றும் கிட் லாஃக் பற்றி பார்த்தோம். இவ்வலைதள பதிவில் கிட் கமிட் அமன்ட் கொண்டு எவ்வாறு கடைசி கமிட்டை புதுப்பிக்கலாம் (Update) என்பது பற்றியும் கிட் லாஃக் மூலம் கிடைக்கும் தகவல்களை எவ்வாறு நமக்கு வேண்டிய வடிவத்தில் மாற்றலாம் என்பதை பற்றியும் பார்க்கவுள்ளோம்.
Advertisement
Amazon Bestsellers - Kindle eBooks
கிட் கமிட் அமன்ட் (git commit -- amend)
சில சமயங்களில் நாம் செய்த கமிட்களில் தவறுகள் ஏற்படலாம். அதனால் நாம் செய்த தவறுகளை திருத்தி புதிய கமிட் செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு புதிய கமிட் செய்யாமல் பிழைகளை சரி செய்வதற்கு கிட்டில் பல வழிகள் உள்ளளன அதில் ஒன்று தான் 'git commit -- amend'. கிட் கமிட் அமன்ட் மூலம் நாம் கடைசி கமிட்டை புதுப்பிக்க(update) முடியும். அதாவது கடைசி கமிட் செய்தியை(message) மாற்ற முடியும் மற்றும் விடுபட்ட கோபுகளையோ(files) அல்லது கோப்புகளை அப்டேட் செய்து கடைசி கமிட்டில் சேர்க்க முடியும். இதன்மூலம் கிட் புராஜக்ட் ஹிஸ்டரி மாற்றி அமைக்கப்படுமே தவிற புதிதாக எதுவும் சேர்க்கப்படாது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கமாண்ட்(command) மூலம் கடைசி கமிட்டின் செய்தியை(commit message) மாற்றி புதுபிக்கலாம், இதற்கு எந்த கோப்புகளும் ஸ்டேஜ் ஏரியவிற்குள்(stage area) இருக்க கூடாது. இதுவே சரிபார்க்கப்பட்ட கோப்புகள் மற்றும் புதிய கோப்புகளை கடைசி கமிட்டில் சேர்ப்பதற்க்கு பின்வரும் கமாண்டை பயன்படுத்த வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள கமாண்ட் சற்று குழப்பம் உண்டுபன்னுவது போலிருக்கும் ஆனால் இது நாம் ஒரு கமிட் செய்வதற்காக பயன்படுத்தப்படும் வழிமுறைகளை தான் இவற்றிற்கும் பயன்படுத்துவோம். கோப்புகளை ஸ்டேஜ் ஏரியவிற்குள் சேர்த்பிரகு மேலே குறிப்பிட்ட கமாண்ட் உபயோகித்தால் நமது கடைசி கமிட்டை மாற்றி அமைக்க முடியும்.

Advertisement
Amazon Bestsellers - Bestsellers in Business & Economics
கிட் லாஃக்
கிட் லாஃக் பற்றி முந்தைய பதிவிலேயே பார்த்துள்ளோம் இப்பொழுது கிட் லாஃக் மூலம் கிடைக்கும் தகவல்களின் வடிவத்தை எவ்வாறு மாற்றலாம் என்று பார்ப்போம். 'git log' கமான்டே போதுமான தகவல்களை தருகிறது எனினும் பின்வரும் கமாண்ட் கிட் மென்பொருளின் சுவரசியங்களை பற்றி அறிந்து கொள்ள உதவும். மேலும் கிட் லாஃக் பற்றி விவரமாக தெரிந்துகொள்ள 'git log --help' பயன்படுத்தலாம்.
git log

git log --oneline

நம்பர்களே! இப்பதிவின் மூலம் கிட் கமிட் அமன்ட் நன்றாக புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பதிவினை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று தோன்றினால் கீழே உள்ள கமென்ட்டில் தெரிவிக்கவும். நமது அடுத்த வலைதள பதிவில் கிட் ஸ்டாஷ் மற்றும் கோப்புகளை ஸ்டேஜிங்க் பகுதியில் இருந்து எவ்வாறு நீக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
நன்றி!
#learngit #learngitintamil #gitlog #gitcommit #gitcommitamend #programming #software