• Janarthanan Soundararajan

Learn Git Commit and Git Log in Tamil - Git கமிட் மற்றும் Git லாஃக் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

Updated: Jun 28, 2019


நமது முந்தைய வலைதள பதிவில் கிட் கமிட் பற்றியும் கிட் லாஃக் பற்றியும் விரிவாக பார்போம் என்று தெரிவித்திருந்தேன், அதன் படி நாம் முதலில் கிட் கமிட் பற்றி விரிவாக பார்ப்போம்.


கிட் கமிட்

கிட் கமிட், நாம் நமது ரெபோசிடரியில் செய்த மாறுதல்களையும், புதிதாக சேர்த்தவற்றையும் ஒரு பதிப்பாக சேகரித்து வைப்பதற்கு உதவுகிறது. எனவே நாம் எப்போது வேண்டுமானாலும் நமக்கு தேவையான கோப்புகளையும் அவற்றின் நிலைமாறாமலும் திரும்ப பெற முடியும்.


இதனால் என்ன பயன்?

பதிப்புகளாக சேகரித்து வைப்பதன் மூலம் எதேனும் ஒரு காரணத்தால் அல்லது தவறினால் நமது மென்பொருள் இயங்காமல் போனால் சேமித்து வைத்துள்ள பதிப்புகளில் சரியாக இயங்கும் கோப்புகளை கொண்டு நாம் சரிசெய்ய இயலும். அதாவது இதன்மூலம் கோப்புகளின் நிலையை பழைய நிலைக்கே மற்ற முடியும்.


கிட் கமிட் செய்யும் வழிமுறை

மாற்றம் செய்யப்பட்ட மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட கோப்புகளை ஸ்டேஜிங்க் ஏரியாவிற்க்குள் சேர்த்தபிறகே நம்மால் கமிட் செய்ய முடியும். 'git commit' கமான்ட் பயன்படுத்தி நாம் கிட் கமிட் செய்யலாம். இதில் '-m' கமிட்கான குறிப்பு செய்தியை அளிக்க பயன்படுகிறது.

'-am' கோப்புகளை ஸ்டேஜ் செய்துவிட்டு பின்பு கமிட்கான குறிப்பு செய்தியை சேகரிக்க பயன்படுகிறது.


கிட் லாஃக்

இது நாம் எபோதெல்லம் என்னென்ன கமிட்கள் செய்துள்ளோம் என்பதை அறிய பயன்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் கமிட் ஹாஸ்(commit hash) மிக முக்கியமானது, இதனைக் கொண்டே நமது முந்தைய பதிப்புகளை பெறமுடியும். பின்வரும் வலைதள பதிவில் இவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

முதல் வரியில் commit என்ற வார்த்தைக்கு பிறகு வருவதே கமிட் ஹாஸ் ஆகும். இரண்டாம் வரியில் இருப்பது ஆசிரியரின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியும். மூன்றாவது வரியில் எந்த நாளில் எந்த நேரத்தில் கமிட் செய்துள்ளார்கள் என்பதற்காக குறிப்பு.

அவ்வளவுதானா? கிட் கமிட் பற்றி நிறைய உள்ளதே அவற்றை எல்லாம் குறிப்பிடவில்லை என்று தோன்றலாம், அதுத்ததடுத்த வலைதள பதிவில் விவரமாக பார்க்கலாம். நமது அடுத்த பதிவில் 'git commit --amend' பற்றியும் கிட் லாஃக் மூலம் கிடைக்கும் வெளியீட்டின் வடிவத்தை எவ்வாறு மாற்றலாம் என்றும் பார்க்கலாம்.

நன்றி!


#gitintamil #git #learngit #versioncontrol

112 views2 comments

©2020 by Techaaroorian.

  • Pinterest
  • Twitter Social Icon
  • Facebook
  • YouTube