• Janarthanan Soundararajan

Why Python is regarded as easy to learn a programming language - Learn Python in Tamil.

Updated: Dec 16, 2019

பைத்தான் நிரலாக்க மொழி ஏன் எளிமையாக கற்க கூடிய ஒன்றாக கருதப்படுகிறது.


இன்றைய சூழலில் பிரபலமான மற்றும் அதிக நிறுவனங்களில் பயன்படுத்தபடும் ஒரு நிரலாக்க மொழி பைத்தான்(Python). மற்ற நிரலாக்க மொழிகளை ஒப்பிடும் பொழுது பைத்தான் கற்பதற்கும் பயன்படுத்துவதற்கும் எளிமையான ஒன்றாக கருதப்படுகிறது. அதற்கான காரணங்களை பற்றி பார்ப்போம்.


சின்டாக்ஸ் மற்றும் பைத்தானின் கோட் ரீடபிளிட்டி ( Python Syntax and Code Readability )

மனிதர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்வதற்கு பயன்படுத்தும் மொழிகள் இயற்கை மொழிகள்( Natural Languages ) என்று அழைக்கப்படுகிறது. மென்பொருளை உருவாக்க இயற்கை மொழிகளை பயன்படுத்த முடியாது, நிரலாக்க மொழிகளான பைத்தான், ஜாவா போன்றவற்றை கொண்டுதான் மென்பொருளை உருவாக்க முடியும். ஆனால் நிரலாக்க மொழிகள் இயற்கை மொழிகள் போல் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இருக்காது. எந்த அளவிற்கு ஒரு நிரலாக்க மொழியை படித்து புரிந்துகொள்ள முடிகிறது என்பதையே கோட் ரீடபிளிட்டி என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். பைத்தானில் எழுதும் வரிகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதிய வரிகளை போன்றே ஒத்திருக்கும். இதனால் புரோகிராமர் எளிதில் தான் எண்ணியவாறு ஒரு மென்பொருளை கட்டமைக்க முடியும். இதனால் தான் பைத்தானின் கோட் ரீடபிளிட்டி எளிதான மற்றும் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. இவற்றை பின்வரும் எடுக்காட்டின் மூலம் அறியலாம்.

அதிக அளவில் உள்ள கற்றலுக்கான வழிகள் ( Availability of Materials for Learning )

பைத்தான் ஒரு ஓபன் சோர்ஸ் (open source) மென்பொருள். அனவே பைத்தானை கற்பதற்கான வழிகள் மற்றும் புத்தகங்கள் இணையதளத்தில் அதிகம். ஒரு முக்கிய மற்றும் பிரபலமான நிரலாக்க மொழியாக இருப்பதால் இலவச மறறும் கட்டண ஆன்லைன் பயிற்சிகள் அதிகம்.


சிறந்த லைப்பிரரிகள் மற்றும் பில்ட்-ன் பங்சன்ஸ் ( Extensive libraries and built-in functions)

நமது வேலையை சுலபமாகும் விதமாக பைத்தானில் பில்ட்-ன் பங்சன்ஸ் தேவையான அளவு உள்ளன, மேலும் ஓபன் சோர்ஸ் என்பதால் அதிக அளவிலான மூன்றாம் தரப்பு(third party) லைப்பிரரிகள் பைத்தானுக்கு அதிக அளவில் உள்ளன.

நன்றி!..

©2020 by Techaaroorian.

  • Pinterest
  • Twitter Social Icon
  • Facebook
  • YouTube